Sunday, June 6, 2010

வேண்டாம் வாசகர் பரிந்துரை - புதிய பதிவர்களுக்கு வழிவிடுங்கள்

சரியாக ஒரு வருடம் முன்னால் கள்ள ஓட்டு பதிவர்களுக்கு ஆப்பு வைத்த திரட்டி என்று பதிவு எழுதினேன், அன்றைய நிலைமையில் தமிழ்மணத்தில் இப்படி வெளிப்படையான குழு அரசியல் இல்லை, மாறாக கள்ள ஓட்டு பிரச்சனை கடுமையாக இருந்தது.. ஓப்பன் ஐடிக்கு தமிழ்மணம் மாறியது அதில் பெரிய முன்னேற்றமாக இருந்தது.. அதன் பின்னர் வந்த பதிவர் கணக்கு  இன்னமும் சிறப்பான முறையாக இருந்தது.. ஆனால்

கடந்த ஒரு ஆண்டில் தமிழ்மணத்தில் குழுக்கள் உருவாகி ஓட்டுக்காக பதிவு என்ற நிலை உறுவானது. வாசகர் பரிந்துரை என்பது அதன் உண்மையான பொருளிலிருந்து விலகி  பதிவின் தரம் சார்ந்த விசயமாக இல்லாமல் குழுவின் பலம் சார்ந்த ஒன்றாகிப்போனது.  இதன் மூலம் வாசகர் பரிந்துரை பகுதி நிரந்தரமாக பத்து பதிவர்கள் ஆதிக்கம் செய்யத்துவங்கினர், அதில் ஒன்று வினவு மற்றவர்கள் யாரென தமிழ்மணம் பயனாளர்களுக்கு தெரியும். இன்றைய நிலையில் நான் யாருடையை பெயரையும் குறிப்பிட்டு சண்டையிட விரும்பவுமில்லை நேரமுமில்லை.

இடத்தைதான் நிரந்தரமாக பிடித்தாயிற்றே , அந்த பொறுப்புணர்ச்சியுடன் நல்ல பதிவுகளை எழுதவாவது முயற்சிகள் நடந்த்தா என்று பார்த்தால் அதுவும் இல்லை, பெரும்பாலான பதிவுகள் மொக்கை எனப்படும் பொருளற்ற அரட்டைகளாகி போயின... இது புதிய பதிவர்களுக்கும், தரமான எழுத்தாளர்களுக்கும் மிகுந்த எரிச்சலையும் தொடர்ந்து எழுதும் ஆர்வத்தையும் குலைத்தது என்றால் அது மிகையில்லை... இந்நிலை எதிர்த்து கலகக் குரல்கள் எழாமல் இல்லை மதார், துமிழ் என வெளிப்படையாக இந்த விசயத்தை எதிர்த்து குரல் எழுப்பினாலும் அதனால் பயனில்லாமல் போனது...  

இப்படியாக தமிழ்மண குழு அரசியல் மாற்றுக்கருத்தின் கழுத்தை நெரிப்பது என்ற பாசிச வடிவத்தை கடந்த வாரம் கண்ட பொழுது, பதிவு எழுத வந்ததே தவறு என எண்ணினேன்.. ஆனால் கடந்த ஆண்டைப்போலவே தமிழ்மணம் சரியான நேரத்தில் விழித்துக்கொண்டது.. சூடான பதிவுகள்* பகுதியை நீக்கியது போலவே பரிந்துரை பகுதியையும் நீக்கிவிட்டது. பரிந்துரை சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தமிழ்மணம் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.. மீண்டும் திறக்குமோ .. கூடாது , கூடவே கூடாது.. உருவான குழுக்கள் இனி கலையப்போவதில்லை, அதனால் தமிழ்மணம் பரிந்துரை நமக்கு தேவையில்லை

சரி இனி என்ன செய்யலாம்?

இடதுபக்கம் அவ்வளவு இடம் இருக்கிறதே அதை என்ன செய்வது? ஆலோசனைக்கா பஞ்சம்... இத்தனைநாள் பி.ப என்னும் பிரபல பதிவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடம் இனி பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒதுக்கப்படட்டும். புதியவை எனும் ரெட் லேபிள் ஒட்டி பதிவு வரும் 30 நாள்  வரை அதன் ஒடைகள் இடது புறம் இருக்கட்டுமே.. இது புதிய பதிவர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வாசகர்களை பதிவர்களாகவும் மாற்றும்.  தமிழ் எழுத்துலகத்துக்கு தமிழ்மணம் செய்து வரும் சேவைகள் சிறப்பானது அதில் இந்த முடிவு இன்னுமொரு மைல்கல்லாக அமையும்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள்

அன்புடன்
பிகில்

* சூடான பதிவுகள் - புதிய பதிவர்களுக்கு தெரிந்திருக்காது, முன்பு தமிழ்மணத்தில் முகப்பில் வரும் பதிவுகள் எத்தனைமுறை கிளிக் செய்து வாசிக்கப்படுகிறதோ அதர்கேற்றார்போல இடப்பக்கம் வரிசைப்படுத்தப்பட்ட காலம் உண்டு. அதையும் நம்ம மக்கள் சும்மா விட்டார்களா அஜால் குஜால் தலைப்புகள், டோண்டு லக்கி போன்ற பி.ப பெயர் கொண்ட தலைப்புகளாக அள்ளி விட்டு மொக்கைகளாள் சூடான பதிவுகளை மொய்த்தனர்....


27 comments:

வினவு said...

ஆதரவு தெரிவிக்கிறோம், ஆனால் ஓட்டு போடவில்லை :-)

ஜக்கிமுக் said...

பார்ப்பன ஆதிக்கத்தை குலைக்க நாஸ்தீகர்கள் கூட்டு சதி

Unknown said...

எனது ஆதரவையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்

செ.சரவணக்குமார் said...

நல்ல கருத்து. தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

நானும் இது குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நாளை இடுகையிடுகிறேன்.

நன்றி.

a said...

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்....

(நாமளும் எப்ப ரவுடி ஆவரது)

குடுகுடுப்பை said...

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வீண் போலவே தோன்றுகிறது.இந்த ஒரு காரணத்திற்காகவே எனது நண்பர்கள் என நான் கருதுபவர்க்ளுக்கு ஓட்டளிப்பதை நிறுத்திவிட்டேன்.ஆனாலும் அவர்கள் என் பதிவுக்கு அளிக்கிறார்கள். இலவசமாக தமிழ்மணம் தரும் சேவையை பதிவர்களாகிய நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன். random view ஆக பதிவுகளை காண்பிக்க ஒரு பத்தியை ஒதுக்கலாம்.

சென்ஷி said...

நல்ல விசயம் பிகில்.. முன்பு புதியவர்களின் இடுகை பழைய தமிழ்மணத்தில் இடது புறத்தில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். பீட்டா வெர்சனை முறைப்படுத்தியப்பின் அந்த வசதியும் இருப்பதில்லை.

//பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒதுக்கப்படட்டும். புதியவை எனும் ரெட் லேபிள் ஒட்டி பதிவு வரும் 30 நாள் வரை அதன் ஒடைகள் இடது புறம் இருக்கட்டுமே..//

30 நாட்கள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது புதிய பதிவர்களின் பதிவுகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும்.

உண்மைத்தமிழன் said...

என்னுடைய ஆதரவும் இதற்குண்டு..!

கோவி.கண்ணன் said...

+1 போட்டாச்சு, ஆனால் பரிந்துரை பகுதியையே எடுத்துவிட்டார்களே.

:)

குடந்தை அன்புமணி said...

தங்களின் கருத்துகளை வழிமொழிகிறேன்...

Anonymous said...

சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை சொல்லியிருக்கிறீர்கள் நண்பா...தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இந்த இடுகையை மெயில் செய்யுங்கள்.

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு யோசனை. தமிழ்மணம் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

TBR. JOSPEH said...

குழுக்கள் சேர்த்து கும்மியடித்தவர்களுக்கு இது நல்ல பாடம். இது தொடரவேண்டும். நல்ல எழுத்துக்களுக்கு, அது புதியவர்களாயினும் பழையவர்களாயினும், ஆதரவு பெருக வேண்டும். இதுதான் என்னைப் போன்றவர்களின் ஆவல்.

ப்ரியன் said...

//அந்த இடம் இனி பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒதுக்கப்படட்டும்//

மிக நல்ல யோசனை.

ஷாகுல் said...

உங்களீன் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ..............

T.V.ராதாகிருஷ்ணன் said...

இடுகையை அப்படியே வழி மொழிகிறேன்

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு வழிமொழிகிறேன் குழு அரசியல் ஒழிக்கப்படவேண்டும் , பரிந்துரையில் இருக்கும் பாதி பதிவு மொக்கை உண்மை

வெற்றி said...

கலக்கல் சார், இதுதான் இன்றையத்தேவை.

South-Side said...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

முன்பெல்லாம் , வாசகர் பரிந்துரைக்கு தமிழ்மணத்தில் புகுபதிகை செய்திருக்க வேண்டியதில்லை...ப்ளோட்டிங் ஐ.பி முக்வரி இருந்தால் ஒருவர் எத்துணை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்று குற்றம் சொன்னார்கள்..

தமிழ்மணம் அதை மாற்றி ஓப்பன் ஐ.டி முறையைப் புகுத்தியது. பலபேர் வாசகர் பரிந்துரை செய்வதையே நிறுத்திக்கொண்டார்கள்..காரணம் அதிலுள்ள சிக்கலினாலும் , அதிக நேரமெடுத்ததாலும்.

பின்பு , வாசகர்கள் புகுபதிகை செய்திருந்தால் மட்டுமே ஓட்டளிக்க இயலும் என்ற முறையை ஏற்படுத்தியது. வரவேற்கத்தகுந்த மாற்றம்...அட வெட்கங்கெட்ட பயலுகளா , ஒவ்வொரு இடுகைக்கும் யார் யார் ஓட்டளித்தார்கள் என்று பார்க்க இயலும் ...அதனால் பொறுப்பாக ஓட்டளியுங்கள் என்றும் சொன்னது..

அதையும் கேட்போமா நாங்கள்...

கடைசியில் நாம் அதிகம் வாசகர் பரிந்துரையில் பார்த்தது....விண்முட்டிப் பாடியவரையும்.......திருப்பதிக்கடவுளையும்.......கொங்குச்சூரியனாரையும் , வினவிய சிலரையும் மற்றும் இன்னும் மிகச்சில பதிவர்களையும் தான்...

அவர்கள் மட்டும்தான் நல்ல பதிவெழுதுகிறார்களா மற்றவர்கள் யாரும் நல்ல பதிவெழுதுவதே இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.அவர்களை யாரும் குறை சொல்லவில்லை.. சொல்லிக்கொள்ளும்படிதான் அவர்கள் எழுதுகிறார்கள்.

இதற்கு தமிழ்மணம் என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி.

பதில்....


முதல் வாக்கியம்தான்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது..

இந்த வாசகர் பரிந்துரை படும் பாட்டைப் பார்த்தால் "முந்தைய" சூடான இடுகையே படுமேல் போலத் தெரிகிறது..

கா***க்கதைகள் , ஜ****க்கதைகள் இப்படி அஜால் குஜால் கதைகளைப் போட்டே தமிழ்மணத்தைக் கடுப்பேத்தி சூடான இடுகைகளுக்கு வேட்டு வைத்தார்கள் நம் மக்கள்..

இப்படி எதைச் செய்தாலும் , அதில் நொட்டை , இதில் நொட்டை என்று சொல்லிக்கொண்டே போனால் தமிழ்மணத்தை இழுத்துச்சாத்துவதை விட நிர்வாகிகளுக்கு வேறொரு மார்க்கம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

காரணம்...தமிழ்மணத்தை நடாத்துபவர்கள் ஒன்றும் தொழில் ரீதியாகவோ , வணிக ரீதியாகவோ நடாத்துவதில்லை என்பதையும் தாண்டி எமக்குத்தெரிந்து தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் பலரும் தற்போதெல்லாம் வலையுலகத்தில் ஏக்டிவ்வாகவே இல்லை.

தமிழ்மண நிர்வாகிகள் என்ன, அனேக மூத்த பதிவர்கள் தற்போதெல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை..

அதற்கெல்லாம் காரணம் இதே போன்ற குழாயடிச் சண்டைகள் தான்..

சென்னை என்ற பெருநகரத்தில் அனேக பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதுவும் , அவர்களுக்குள் அடிக்கடி சண்டை , உரசல் , ஊடல் இவைகள் வருவதென்பது மிகவும் இயல்பானதொன்றே...அவர்கள் பதிவுலகத்தில் சிறுபகுதியினர்...மிஞ்சிப் போனால் ஒரு இருபது சதம் இருப்பார்கள்....ஆனால் ஒட்டுமொத்த பதிவுலகுக்கே அவர்கள் தான் நாட்டாமை போலச் செயல்படுவது கிணற்றுத்தவளையொத்த செயலாகும்...

புரிபவர்கள் புரிந்து கொண்டால் போதும்.

U F O said...

மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
நல்ல யோசனைகள்...!

தமிழ்மணம் கண்டுகொள்ளும் என்று நம்புகிறேன்...


இன்னுமொரு யோசனை தலைவா:

உங்களின் 'இடதுசாரி' தீர்மானம் ஒக்கே. கொஞ்சம் வலதுசாரிக்கு வாருங்கள்... (தமிழ்மண முகப்பின் வலது/இடது சாரிகள்...).

அங்கே...,

// 1-40, 40+, அனைத்தும் //

என்று வகைப்படுத்தி வைத்திருகிறார்கள்...

முதல் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, வந்த ஒவ்வொரு மறுமொழிக்கும் பதிவரே... 'பதில் தருகிறேன்' பேர்வழி என்று தன் மறுமொழிகளையும் இட்டுக்கொண்டே போக.... விளைவு வலது சாரிகளில் பட்டா போட்டுவிடுவார்கள். அதாவது தமிழ்மண முகப்பு வலதுசாரிகளில் இடம்பெருவோரே இடது சாரிகளிலும் இருப்பார்கள்..!!?? உதாரணம்: இங்கே வந்தவை பதினேழு மட்டும், //BIGLE ! பிகில் said...// மட்டுமே பதினைந்து...!!!

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்... அந்த மூன்றாவது tab 'அனைத்தும்' என்பதற்கு பதிலாக...

(அதான் ஏற்கனவே இரண்டிலும் இருக்கே? மறுபடி என்னாத்துக்கு?)

..."இதுவரை மறுமொழிவராதவை" என்ற tab இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். மறுமொழிபெறாத புதியவர்களின்/பிரபலமாகதவரின் இடுகைகளும் கவனம் பெரும் அல்லவா?

சர்தானே தலைவா... பிகிலு...?
சூப்பர் இடுகை. நன்றி.

குறிப்பு: @ வினவு,
//ஆதரவு தெரிவிக்கிறோம், ஆனால் ஓட்டு போடவில்லை// ஏழு நெகடிவ் குத்தியது நீங்கள்தானே...(அவ்வ்வ்வ்)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் யோசனை நல்லதே. சென்ஷி கூறியது போல முன்பு இவ்வசதி இருந்தது. மீண்டும் புதிய பதிவுகளைக் காட்சிப்படுத்துவது குறித்து உரையாடுகிறோம். விரைவில் இதனை ஏற்படுத்த முயலுவோம்.

(தமிழ்மணம் சார்பாக).

BIGLE ! பிகில் said...

@UFO
ஏங்க, நான் ஏதோ நன்றி சொல்ல போக நீங்க இப்பிடி சொல்லிட்டீங்களே... இப்ப உங்களால என் பின்னூட்டத்த எல்லாம் டெலீட் பண்ணிட்டேன்.. அந்த பாவம் உங்கள சும்மா விடாது:-)

BIGLE ! பிகில் said...

ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி, UFO க்கு ஒரு ஸ்பெசல் நன்றி

ஏலியன் said...

ஏழு நெகடிவ் குத்தியது நீங்கள்தானே...(அவ்வ்வ்வ்)

ஊப்போ, எங்கேய்யா இங்க மைனசு இருக்கு, ஏழும் பாசிடிவ்தானேய்யா????? இங்கே தூக்க்கலக்கமா

ராஜவம்சம் said...

உங்கள் கருத்து சரியானதே
ஒரு சின்ன சந்தேகம்
ஒரு சில நல்லப்பதிவுகள்
நம் கண்னில் படாமலேயே போய்விடுமே

BIGLE ! பிகில் said...

ஆஹா மறுபடியும் பரிந்துரையை ஓபன் பண்ணிட்டாங்களே :(

Dino LA said...

நல்ல பயனுள்ள பதிவு