Saturday, May 30, 2009

கள்ள ஓட்டு காரவங்களுக்கு ஆப்பு வைத்த திரட்டி

நேற்று சர்வர் சுத்திகரிப்பு செய்ய இயங்காத வலைப்பதிவுகள் மற்றும் குப்பை பதிவுகளை நீக்க முடிவுசெய்த தமிழ்மணம் நிர்வாகத்தார் இன்று ஜனநாயக சுத்திகரிப்பு வேலைகளை துவங்கியுள்ளனர். அதாவது இனிமேல் தமிழ்மணம் பதிவுப்பட்டையில் ஓட்டுப்போடுபவர்கள் தனது பிளாகர்/வோர்ட்பிரஸ்/ஓபன் ஐடி மூலமாக மட்டுமே ஓட்டளிக்க முடியும். ஒரு ஐடிக்கு ஒரு ஓட்டுதான்.

இனிமேல் தமிழ்மணம் கள்ள வோட்டு குறையும் என எதிர்பார்க்கலாம். மொக்கை பதிவுகள் கூட ஓட்டு டயரியா வந்து 100 - 200 லீடிங் வாங்குவது, மகுடத்தை அட்வான்ஸ் ரிசர்வேஷன் செய்து பதிவு போடுவது, வோட்டு சாவடியே இல்லாமல் ஓட்டாய் குவிப்பது, கரம் வைத்து மைனஸ் ஓட்டு குத்துவது போன்ற நிகழ்வுகள் குறையும்.

இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை காக்கவந்த சர்வரோக நிவாரணி இல்லைதான். மின் வாக்கு இயந்திரத்திலேயே கள்ள வோட்டு போடும் கலையில் தேர்ந்த தமிழர்களுக்கு இதில் ஓட்டை கண்டுபிடிக்க ரொம்பநாள் ஆகாது, நானும் அந்த முயற்சியில் இறங்கத்தான் போகிறேன்.

என்னை பொருத்தவரை இப்படியெல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. ஜனநாயகத்தை காக்க ஜனநாயகமே இல்லாமல் செய்வதுதான் வழி, அதாவது மகுடத்தையும், வாசகர் பரிந்துரையையும் நீக்கிவிட்டு சூடான இடுகை பட்டியலை நீக்கலாம். தனியே ஒரு புக்மார்க்கிங் பிரிவு ஏற்படுத்தி ஓட்டை அங்கு சேர்க்கலாம். பின்னூட்ட பிதாமகர்கள் உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் தமிழ்மணம் அட்மினுக்கு 'தந்தி' அனுப்புகிறேன்.

Friday, May 29, 2009

என்னைய தூக்கிடாதீங்க நான் இனிமே ஒழுங்கா எழுதிடுவேன்

காலேல செய்தியை படிச்ச உடனே திக்குன்னு ஆயிடுச்சு நம்மள தூக்கிடுவாங்களோன்னு பயந்திட்டேன். உண்மையிலேயே எழுத ஆசைதான் ஆனா கம்பேனியில லேஆஃப் பயம் காட்டியே ஒரு நாளைக்கு 28 மணிநேரம் வேல வாங்கிடறாங்க.. ஏதோ கிடைத்த கேப்புல ஒரு பதிவ போட்டு தமிழ்மணம் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டாச்சு. பாக்காலாம்

Friday, March 20, 2009

சுய புராணம்

காலேல எழுந்தவொடனே பேப்பர் படிச்சு நாளாயிடுச்சு. மொத வேலையே தமிழ்மணம்தான். ஆபீசுல, டீக்கடையில எல்லா எடத்துலையும் பிளாகுதான். ஏதாவது ஒன்னு நடந்தா சோ இன்னா சொல்லிகிறாரு, நக்கீரன் இன்னா எய்திகிராருங்குற நெலம போயி லக்கியோட கருத்து என்ன, வினவு என்ன சொல்றாங்க, டோண்டு இதபத்தி எழுதுவாரா, தமிழ் ச்சி ஏதாவது எய்திகிறாரான்னு மண்ட கொடயுது. சரி நம்பள பத்தியும் நாலு பேரு இப்படி சிந்திச்சா நல்லா இருக்கமேங்கர ஈகோதான்பா நான் பிகில் ஊத காரணம். பின்னூட்டம் போட்டு என்ன வெல்கம் பண்ணுவீங்கல்ல...?