Monday, June 28, 2010

சூப்பர் strip tease ஒன்லி 18+

என்னடா காலேலயே அடல்ட்ஸ் ஒன்லி மேட்டாரான்னு கோவப்படாதீங்க...



இந்த fileல பிளாகருக்குள்ள கொண்டு வரவே எனக்கு 3 மணிநேரம் ஆச்சு.... சோ கேன் ஐ ஹேவ் ஒன் ஓட்டு?

ஒரு உருத்தல் - Sensuous movementல் ஆண் உடலை காண்பிக்கும் துணிவு ஆண்களுக்கு வேண்டும்... hypocrisy ஓழிந்தால் சரி!

Thursday, June 17, 2010

ஈரோடு ரவி யூ ஆர் ரியலி கிரேட்

உலகத்துல மூனே மூணு அறிவாளிங்க அதுல 2 பேரு உங்களுக்கு ஏற்கனவே தெரியும்..
இதோ நம்பர் 3


(வீடியோ லோடிங்கு பீளீஸ் வெயிட்டிங்கு.....)




மேலும் விவரங்களுக்கு http://www.avsrm.blogspot.com




Sunday, June 6, 2010

வேண்டாம் வாசகர் பரிந்துரை - புதிய பதிவர்களுக்கு வழிவிடுங்கள்

சரியாக ஒரு வருடம் முன்னால் கள்ள ஓட்டு பதிவர்களுக்கு ஆப்பு வைத்த திரட்டி என்று பதிவு எழுதினேன், அன்றைய நிலைமையில் தமிழ்மணத்தில் இப்படி வெளிப்படையான குழு அரசியல் இல்லை, மாறாக கள்ள ஓட்டு பிரச்சனை கடுமையாக இருந்தது.. ஓப்பன் ஐடிக்கு தமிழ்மணம் மாறியது அதில் பெரிய முன்னேற்றமாக இருந்தது.. அதன் பின்னர் வந்த பதிவர் கணக்கு  இன்னமும் சிறப்பான முறையாக இருந்தது.. ஆனால்

கடந்த ஒரு ஆண்டில் தமிழ்மணத்தில் குழுக்கள் உருவாகி ஓட்டுக்காக பதிவு என்ற நிலை உறுவானது. வாசகர் பரிந்துரை என்பது அதன் உண்மையான பொருளிலிருந்து விலகி  பதிவின் தரம் சார்ந்த விசயமாக இல்லாமல் குழுவின் பலம் சார்ந்த ஒன்றாகிப்போனது.  இதன் மூலம் வாசகர் பரிந்துரை பகுதி நிரந்தரமாக பத்து பதிவர்கள் ஆதிக்கம் செய்யத்துவங்கினர், அதில் ஒன்று வினவு மற்றவர்கள் யாரென தமிழ்மணம் பயனாளர்களுக்கு தெரியும். இன்றைய நிலையில் நான் யாருடையை பெயரையும் குறிப்பிட்டு சண்டையிட விரும்பவுமில்லை நேரமுமில்லை.

இடத்தைதான் நிரந்தரமாக பிடித்தாயிற்றே , அந்த பொறுப்புணர்ச்சியுடன் நல்ல பதிவுகளை எழுதவாவது முயற்சிகள் நடந்த்தா என்று பார்த்தால் அதுவும் இல்லை, பெரும்பாலான பதிவுகள் மொக்கை எனப்படும் பொருளற்ற அரட்டைகளாகி போயின... இது புதிய பதிவர்களுக்கும், தரமான எழுத்தாளர்களுக்கும் மிகுந்த எரிச்சலையும் தொடர்ந்து எழுதும் ஆர்வத்தையும் குலைத்தது என்றால் அது மிகையில்லை... இந்நிலை எதிர்த்து கலகக் குரல்கள் எழாமல் இல்லை மதார், துமிழ் என வெளிப்படையாக இந்த விசயத்தை எதிர்த்து குரல் எழுப்பினாலும் அதனால் பயனில்லாமல் போனது...  

இப்படியாக தமிழ்மண குழு அரசியல் மாற்றுக்கருத்தின் கழுத்தை நெரிப்பது என்ற பாசிச வடிவத்தை கடந்த வாரம் கண்ட பொழுது, பதிவு எழுத வந்ததே தவறு என எண்ணினேன்.. ஆனால் கடந்த ஆண்டைப்போலவே தமிழ்மணம் சரியான நேரத்தில் விழித்துக்கொண்டது.. சூடான பதிவுகள்* பகுதியை நீக்கியது போலவே பரிந்துரை பகுதியையும் நீக்கிவிட்டது. பரிந்துரை சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தமிழ்மணம் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.. மீண்டும் திறக்குமோ .. கூடாது , கூடவே கூடாது.. உருவான குழுக்கள் இனி கலையப்போவதில்லை, அதனால் தமிழ்மணம் பரிந்துரை நமக்கு தேவையில்லை

சரி இனி என்ன செய்யலாம்?

இடதுபக்கம் அவ்வளவு இடம் இருக்கிறதே அதை என்ன செய்வது? ஆலோசனைக்கா பஞ்சம்... இத்தனைநாள் பி.ப என்னும் பிரபல பதிவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடம் இனி பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒதுக்கப்படட்டும். புதியவை எனும் ரெட் லேபிள் ஒட்டி பதிவு வரும் 30 நாள்  வரை அதன் ஒடைகள் இடது புறம் இருக்கட்டுமே.. இது புதிய பதிவர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வாசகர்களை பதிவர்களாகவும் மாற்றும்.  தமிழ் எழுத்துலகத்துக்கு தமிழ்மணம் செய்து வரும் சேவைகள் சிறப்பானது அதில் இந்த முடிவு இன்னுமொரு மைல்கல்லாக அமையும்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள்

அன்புடன்
பிகில்

* சூடான பதிவுகள் - புதிய பதிவர்களுக்கு தெரிந்திருக்காது, முன்பு தமிழ்மணத்தில் முகப்பில் வரும் பதிவுகள் எத்தனைமுறை கிளிக் செய்து வாசிக்கப்படுகிறதோ அதர்கேற்றார்போல இடப்பக்கம் வரிசைப்படுத்தப்பட்ட காலம் உண்டு. அதையும் நம்ம மக்கள் சும்மா விட்டார்களா அஜால் குஜால் தலைப்புகள், டோண்டு லக்கி போன்ற பி.ப பெயர் கொண்ட தலைப்புகளாக அள்ளி விட்டு மொக்கைகளாள் சூடான பதிவுகளை மொய்த்தனர்....


Saturday, June 5, 2010

கைய குடுங்க சென்ஷி... யூ ஆர் கிரேட்!

முதலில்: அருமை சென்ஷி, நீங்கள் இன்னிக்கு செய்திருக்கும் பணி மகத்தானது... உங்களுக்கு என் வந்தனங்கள்.

அடுத்து: சிவராமன் நீங்க ஒரு ஜினியஸ், அன்னிக்கு நீங்க பதிவுலக பெண்களுக்காக நட்பை தியாகம் பண்ணியிருப்பதாக பதிவு எழுதினேன்.. இப்போதான் புரியுது அது தியாகத்தையும் தாண்டிய ஒரு இன்னலெக்ட் இருப்பது... ஒரு வேளை நீங்களும் வினவும் எழுதிய அந்த கூட்டுப் பதிவை உங்கள் பெயரிலோ அல்லது உங்க பிளாகிலோ வந்திருந்தால்... அன்னிக்கே.. அப்பவே... இந்த கள்ளக்காதல் கிசுகிசு உருவாகி இப்படி ஒரு விவாதமே பொதுவெளியில் நடந்திருக்காது... அந்த நாம்கேவாஸ்தே மன்னிப்பும் கூட இல்லாமல் போயிருக்கும்.. வினவில் அது அடையாளம் இல்லாமல் வந்தது அருமையான யோசனை.. ஹேட்ஸ் ஆஃப்...

முடிவாக: உண்மைத்தமிழன், இந்த பதிவு வெளிவந்தது சந்தனமுல்லைக்கு சங்கடமா?... வாஸ்தவம்தான்.. நேத்திக்கு வினவுகிட்ட ஆதாரம் கேட்டீங்களே அதை வெளியிட்டால் சங்கடங்கள் வராதா? உங்கள புரிஞ்சுக்கவே முடியலையே?

கடைசியாக: நர்சிமுக்கு கண்டனம் சொல்லாதவர்களெல்லாம் இங்க வந்து கண்டனம் சொல்வதை பார்க்கும் போது பதிவுலகில் நாட்டாமையும், சொம்பும் தேவைதானோ என்று தோன்றுகிறது.. 

கட்ட கடைசியாக.: டாக்டர் புரூனோ, கவலப்படாதீங்க, தம்தூண்டுக்கு ஒரு மன்னிப்பு கேட்டீங்கன்னா போதும்.... மறந்திடுவோம். என்னங்க நான் சொல்றது என் மனித குல கூட்டமே?

அன்புடன்

பிகில்

பி.கு 1 - இந்த பதிவு துவங்கிய இடம் இது..... http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html

பி.கு 2 - ஐயா, அம்மா, போகும் போது http://nilavakan.blogspot.com/2010/06/blog-post_04.html இந்த நாயையும் செருப்பால் அடித்து விட்டு போங்கள்




Friday, June 4, 2010

Wednesday, June 2, 2010

சுகுணா ஏன் இந்த தீசல் புத்தி

சரியா ஒருவருசம் ஓவர்சீஸ் கிளையன்ட சைட் இம்ளிமென்டேசன் முடிச்சிட்டு வந்தா இங்க ரத்த ஆறு ஓடுது.... நல்ல வேளையா எல்லா பதிவையும் படிச்சதனாலையும் பதிவர்கள் யாரையுமே எனக்கு தெரியாததாலையும்  சுதந்திரமா ஒரு சிந்தனையை தக்க வச்சுக்க முடிஞ்சது....

ஆக இந்த பஞ்சாயத்துல என்னோட 2 பைசாவ நான் போட்டே ஆகனும்

அதாவது பதவுலகில் பெண்கள் எழுதுவதே கஷ்டம் அப்படி எழுதறவங்களுக்கும் சில பேரு டார்சர் கொடுக்கறான்... என்ன செய்யலாம்? பிரச்சன கொடுக்கறவங்கள தட்டிக்கேட்கலாம், இல்ல பொறுத்துகிட்டு சும்மா இருக்கலாம்.. 

இத்தனநாளா பொறுத்துகிட்டு சும்மா இருந்த சிவராமன் பூக்காரிக்கப்புறம் அவரு பொறுமையை தூக்கி எரிஞ்சிட்டு யாரெல்லாம் பெண் பித்தர்கள், யாரெல்லாம் சாதி பாக்குறவங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து கொடுக்க வேண்டிய எடத்துல கொடுத்திட்டாரு.. நல்ல வேலதான் அது... 

சரி இனிமேலாவது இந்த சில்லறைங்க பயந்து கம்முனு இருப்பாங்க பெண்கள் நிம்மதியா எழுத முடியும்ன்னு நென்ச்சா இப்ப நம்ம அண்ணன் சுகுணா திவாகர் சிவராமன அம்பலப்படுத்தறேன்னு  பிரச்சனைய அழகா டைவர்ட் பண்ணிட்டாரு.. இப்போ எல்லாரும் சிவராமன கும்கும்முன் கும்முறாங்களா... பூக்காரியின் பீத்த பதிவர் எஸ்கேப்.. 

ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுகங்க மக்கா சிவராமன் செஞ்சது தியாகம். பெண்பதிவர்களுக்கு ஒரு சுதந்திர வெளி வேணும்னுதான் அவர் இந்த வேலைய செஞ்சிருக்காரு. இதுக்காக அவர பாராட்டியே ஆகனும்... 

அவ்வளவுதாம்பா

இப்படிக்கு
பிகில்

பி.கு. இதுல வினவ பத்தி ஏதாவது எதிர்பாத்தீங்களா.. சாரிப்பா 


Saturday, May 30, 2009

கள்ள ஓட்டு காரவங்களுக்கு ஆப்பு வைத்த திரட்டி

நேற்று சர்வர் சுத்திகரிப்பு செய்ய இயங்காத வலைப்பதிவுகள் மற்றும் குப்பை பதிவுகளை நீக்க முடிவுசெய்த தமிழ்மணம் நிர்வாகத்தார் இன்று ஜனநாயக சுத்திகரிப்பு வேலைகளை துவங்கியுள்ளனர். அதாவது இனிமேல் தமிழ்மணம் பதிவுப்பட்டையில் ஓட்டுப்போடுபவர்கள் தனது பிளாகர்/வோர்ட்பிரஸ்/ஓபன் ஐடி மூலமாக மட்டுமே ஓட்டளிக்க முடியும். ஒரு ஐடிக்கு ஒரு ஓட்டுதான்.

இனிமேல் தமிழ்மணம் கள்ள வோட்டு குறையும் என எதிர்பார்க்கலாம். மொக்கை பதிவுகள் கூட ஓட்டு டயரியா வந்து 100 - 200 லீடிங் வாங்குவது, மகுடத்தை அட்வான்ஸ் ரிசர்வேஷன் செய்து பதிவு போடுவது, வோட்டு சாவடியே இல்லாமல் ஓட்டாய் குவிப்பது, கரம் வைத்து மைனஸ் ஓட்டு குத்துவது போன்ற நிகழ்வுகள் குறையும்.

இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை காக்கவந்த சர்வரோக நிவாரணி இல்லைதான். மின் வாக்கு இயந்திரத்திலேயே கள்ள வோட்டு போடும் கலையில் தேர்ந்த தமிழர்களுக்கு இதில் ஓட்டை கண்டுபிடிக்க ரொம்பநாள் ஆகாது, நானும் அந்த முயற்சியில் இறங்கத்தான் போகிறேன்.

என்னை பொருத்தவரை இப்படியெல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. ஜனநாயகத்தை காக்க ஜனநாயகமே இல்லாமல் செய்வதுதான் வழி, அதாவது மகுடத்தையும், வாசகர் பரிந்துரையையும் நீக்கிவிட்டு சூடான இடுகை பட்டியலை நீக்கலாம். தனியே ஒரு புக்மார்க்கிங் பிரிவு ஏற்படுத்தி ஓட்டை அங்கு சேர்க்கலாம். பின்னூட்ட பிதாமகர்கள் உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் தமிழ்மணம் அட்மினுக்கு 'தந்தி' அனுப்புகிறேன்.